/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி தொழிற்பேட்டையில் 5 நிறுவனங்களுக்கு 'சீல்'
/
கிண்டி தொழிற்பேட்டையில் 5 நிறுவனங்களுக்கு 'சீல்'
ADDED : மார் 19, 2025 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி, அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள ஐந்து நிறுவனங்கள், பல ஆண்டுகளாக குடிநீர் வரி செலுத்தாமல் இருந்தன. மொத்தம், 4.66 லட்சம் ரூபாய் நிலுவை இருந்தது.
அதிகாரிகள், பலமுறை 'நோட்டீஸ்' வழங்கியும் வரி செலுத்தவில்லை. இதையடுத்து, மண்டல குடிநீர் வாரிய அதிகாரிகள், ஐந்து நிறுவனங்களுக்கும் நேற்று, 'சீல்' வைத்தனர்.