/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவர்கள் வாகனம் ஓட்டியதால் விபத்து இந்தாண்டில் 5 பேர் பலி; 22 பேர் காயம்
/
சிறுவர்கள் வாகனம் ஓட்டியதால் விபத்து இந்தாண்டில் 5 பேர் பலி; 22 பேர் காயம்
சிறுவர்கள் வாகனம் ஓட்டியதால் விபத்து இந்தாண்டில் 5 பேர் பலி; 22 பேர் காயம்
சிறுவர்கள் வாகனம் ஓட்டியதால் விபத்து இந்தாண்டில் 5 பேர் பலி; 22 பேர் காயம்
ADDED : மே 06, 2025 11:34 PM
சென்னையில் நடப்பாண்டில் சிறார்கள் வாகனம் ஓட்டிய வகையில், விபத்து ஏற்படுத்தியதில், நடப்பாண்டில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்; 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னையில், 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும், போக்குவரத்து போலீசாரும், தன்னார்வ அமைப்புக்களும் இணைந்து, சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.
சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டியதன் அவசியம், விதி மீறலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும், ஆங்காங்கே 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவது தொடர்கிறது.
இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது:
வசதி படைத்த சிலர், தங்கள் பிள்ளைகளின் சொகுசுக்காக இருசக்கர வாகனம், கார்களை வாங்கி கொடுக்கின்றனர்.
அவற்றை எடுத்துக் கொண்டு, அவர்கள் கண் மூடித்தனமாக வாகனத்தை இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
* கடந்த 2023ல் சிறார்கள் வாகனம் ஓட்டிய வகையில், 27 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்; 22 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது
* இதுவே, 2024ல் நடந்த 36 விபத்துக்களில், 13 பேர் உயிரிழிந்துள்ளனர்; 33 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
* சிறார்கள் ஓட்டிய வாகனங்களால், நடப்பு ஆண்டில் இதுவரை நடந்த, 17 விபத்துகளில், ஐந்து பேர் இறந்துள்ளனர்; 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து ஏற்படுத்தும் சிறார்கள், அவர்களின் பெற்றோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் விபத்துக்கள் குறைந்து வருகிறது.
பெற்றோருக்கு சிக்கல்
சிறார்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி கொடுக்கும் பெற்றோர் அல்லது உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி யாரேனும் விபத்து ஏற்படுத்தினால், 25,000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. வாகன உரிமையாளருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-----------------
தந்தைக்கு சிறை
* கடந்த மாதம், 7 ம் தேதி வடபழநியில், 13 வயது சிறுவன் மாருதி ஷிப்ட் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், மகாலிங்கம், 83 முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில், சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும், அவரது தந்தையை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
----------------
ஆண்டு வாரியாக 17 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டியதால் ஏற்படுத்திய விபத்துக்கள்.
ஆண்டு - விபத்து- உயிரிழப்பு - காயம்
2023 27 5 22
2024 36 13 33
2025 17 5 22
***
- நமது நிருபர் -