/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தி முனையில் பணம் பறித்த 5 பேர் கைது
/
கத்தி முனையில் பணம் பறித்த 5 பேர் கைது
ADDED : நவ 21, 2024 12:39 AM
சென்னை,
சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்தவர் சக்தி, 21. அவர், நேற்று முன்தினம் அதிகாலை சூளைமேடு திருவள்ளூவர்புரம் பகுதியில் நண்பர்கள் அரவிந்த், கோகுலிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த, ஐந்து மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, கூகுள் பே வாயிலாக 800 ரூபாய் மிரட்டி பெற்று, இரண்டு மொபைல் போன்களையும் பறித்துச் சென்றனர்.
சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் விசாரித்தனர். சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த கிஷோர்குமார், 21, விக்னேஷ், 24, அப்துல்சமத், 28, கரண்குமார், 24, அபிஷேக், 20 ஆகிய ஐந்து பேர், மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
ஐந்து பேரையும் நேற்று கைது செய்த போலீசார், பணம் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும், வழிப்பறி, கஞ்சா, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.