ADDED : மார் 17, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
புளியந்தோப்பு: சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பு, வ.உ.சி., நகர் 8வது தெருவில், மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் உள்ளே சிலர் சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்ற புளியந்தோப்பு போலீசார், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட வேலு, அலெக்ஸ், சுரேஷ், முத்துகுமார் மற்றும் அஜித்குமார் ஆகியோரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், 7,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
