/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் விற்ற 5 பேர் சிக்கினர்
/
போதை பொருள் விற்ற 5 பேர் சிக்கினர்
ADDED : ஆக 04, 2025 04:28 AM

சென்னை:ஐ.சி.எப்., மற்றும் திருவல்லிக்கேணியில் போதை பொருள் விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐ.சி.எப்., அம்பேத்கர் பிரதான சாலையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்ற, அயனாவரத்தைச் சேர்ந்த சபீர் அகமது, 26, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
ஆட்டோ ஓட்டுநரான இவர் மீது, போதை பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, சபீர் அகமது சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொருவர் சிக்கினார் திருவல்லிக்கேணி, லால்பேகம் சந்திப்பு அருகே, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் திருவல்லிக்கேணி போலீசார், ஜூன் 28ல் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் 'சூடோஎபிட்ரின்' என்ற போதை பொருள் விற்று வந்த, அதே பகுதியைச் சேர்ந்த பீர் முகமது, 46; சையது ஜலாலுதீன், 49, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாசர், 55, என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவரது கூட்டாளியான, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கமர் அலி, 53, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

