ADDED : ஜன 09, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொளம்பூர், சென்னை, நொளம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே, சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் அதிக அளவில் இருந்த நிலையில்,
இரவு 7:50 மணியளவில்,அங்குள்ள மின்துாக்கி திடீரென பழுதடைந்து, முதல் தளத்திற்கும் தரை தளத்திற்கும் இடையே சிக்கியது.
அதில், 3 பெண்கள் உட்பட 5 பேர் சிக்கினர். சூப்பர் மார்க்கெட் பணியாளர்கள், மின்துாக்கியில் சிக்கிய வாடிக்கையாளர்களை மீட்க முயன்றும் முடியவில்லை.
தகவலின்படி வந்த ஜே.ஜே., நகர் தீயணைப்பு வீரர்கள், மின்துாக்கியில் சிக்கிய ஐந்து பேரையும் மீட்டனர். நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.