/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெயின்டர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'
/
பெயின்டர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'
ADDED : நவ 10, 2024 09:09 PM
திருவொற்றியூர்:பெயின்டர் வீட்டின் பூட்டை உடைத்து, ஐந்து சவரன் தங்க நகை, 10,000 ரூபாய் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர், நேதாஜி நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 35, பெயின்டர். இவரது மனைவி மங்கையர்க்கரசி. தம்பதிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், தீபாவளிக்காக கடந்த அக்., 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, ரமேஷ் குடும்பத்துடன் புதுக்கோட்டை சென்றார்.
நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகள், 10,000 ரூபாய் உள்ளிட்டவை திருடு போயிருந்தன.
இதுகுறித்து ரமேஷ், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.