ADDED : பிப் 23, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், தாம்பரம் அருகே, வரதராஜபுரம், ராயப்பா நகரில் வசிப்பவர் நாகம்மாள், 68. நேற்று, தன் மகளுடன் வீட்டில் இருந்தார்.
அப்போது, பைக்கில் அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், இன்டர்நெட் இணைப்பு கொடுப்பதாகக் கூறி, வீட்டின் உள்ளே நுழைந்தனர்.
அப்போது, நாகம்மாள் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரையடுத்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.