50 ஆண்டுகால ஆவணப்படம் புதுப்பித்து மீண்டும் வெளியீடு
50 ஆண்டுகால ஆவணப்படம் புதுப்பித்து மீண்டும் வெளியீடு
ADDED : மே 30, 2026 01:38 AM

சென்னை: பிரபல ஆவணப்பட இயக்குநரான, மறைந்த எஸ்.கிருஷ்ணசாமியின், 'சிந்து சமவெளி முதல் இந்திராகாந்தி வரை' என்ற, 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணப்படம், புதுப்பித்து மீண்டும் நேற்று வெளியிடப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் நடந்த விழாவில், புதுப்பிக்கப்பட்ட ஆவணப்படத்தை, பேலுார் ராமகிருஷ்ண மட தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுத மானந்தாஜி மகராஜ், 'இந்தியன் இம்ப்ரின்ட்ஸ்' என்ற யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டு பேசிய தாவது:
இந்திய கலாசாரத்தின் அஸ்திவாரம், ஆன்மிக மதிப்புகளில்தான் உள்ளது. மொழி, இனம் என, பல பிரிவுகள் இருந்தாலும், ஆன்மிக வளர்ச்சியும், பகிரப்பட்ட கலாசார பண்புகளுமே, இந்தியாவை இன்றும் ஒருங்கிணைத்து வைக்கின்றன.
சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்குப் பார்வையை, இந்த ஆவணப்படம் அழகாகப் பிரதிபலிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆவணப்படத்தின் மறுசீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் குழுவின் தலைவர் லதா கிருஷ்ணா பேசுகையில், ''இன்றைய ஊடகங்கள் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மட்டுமே சொல்கின்றன; ஆனால், இந்த ஆவணப்படம் அது ஏன் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்,'' என்றார்.
விழாவில், 'கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்' தலைவர் மோகனா கிருஷ்ணசுவாமி, 'கிருஷ்ண சாமி அசோசியேட்ஸ்' இயக்குநர் கீதா கிருஷ்ண ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
