/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
50 ஆண்டு பழமையான குழாய் உடைந்து கழிவுநீர் ஆறாக ஓடுவதால் தொற்று அபாயம்

ADDED : செப் 17, 2025 01:02 AM

தண்டையார்பேட்டை
தண்டையார்பேட்டையில், 50 ஆண்டு பழமையான கழிவுநீர் குழாய் உடைந்து, கழிவுநீர் ஆறு போல் தேங்கியுள்ளதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை, இளைய முதலி தெருவில் கழிவுநீரேற்று நிலையம் உள்ளது. அதன் வெளியே, ராயபுரம் கழிவுநீரேற்று நிலையத்தில் இருந்து, 50 ஆண்டுகள் பழமையான கழிவுநீர் குழாய் செல்கிறது.
சமீபத்தில் பழமையான இந்த கழிவுநீர் குழாய் உடைந்தது. இதனால், அப்பகுதி முழுதும் ஆறு போல் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், அருகில் உள்ள திலகர் நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. 2வது முறையாக கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரச்னைனக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ராயபுரம் கழிவு நீரேற்று நிலையத்தில் எட்டு மணி நேரம் பயன்பாட்டை நிறுத்தினால் தான் குழாய் உடைப்பை சரிசெய்ய முடியும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைந்து கழிவுநீர் குழாய் உடைப்பு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.