sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

53 மழைமானிகள் பொருத்தம்

/

53 மழைமானிகள் பொருத்தம்

53 மழைமானிகள் பொருத்தம்

53 மழைமானிகள் பொருத்தம்


ADDED : செப் 30, 2024 12:22 AM

Google News

ADDED : செப் 30, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில், 53 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:

புதிதாக உருவான கொளத்துார் உள்ளிட்ட, 17 தாலுகா அலுவலக எல்லையில் உள்ள வருவாய் துறை, மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலக கட்டடங்களை தேர்வு செய்து, 53 இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் பதிவாகும் மழை அளவு, 'சென்சார்' வாயிலாக, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மழை அளவு கட்டுப்பாடு அறையில் பதிவாகும்.

அங்கிருந்து மொத்தமாக தகவல் சேகரித்து, வானிலை ஆய்வு மையம் மற்றும் பேரிடர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதற்கு ஏற்ப, தானியங்கி மழைமானிகளில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டு உள்ளது.

மழை அளவைப் பொறுத்து, அந்தந்த பகுதியில் பேரிடர் பணிகள் மேற்கொண்டு, மக்களை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us