/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியிடம் மீண்டும் அத்துமீறல் 53 வயது நபர் 2வது முறை கைது
/
சிறுமியிடம் மீண்டும் அத்துமீறல் 53 வயது நபர் 2வது முறை கைது
சிறுமியிடம் மீண்டும் அத்துமீறல் 53 வயது நபர் 2வது முறை கைது
சிறுமியிடம் மீண்டும் அத்துமீறல் 53 வயது நபர் 2வது முறை கைது
ADDED : ஜூலை 10, 2025 12:11 AM
அண்ணா நகர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கடந்தாண்டு 'போக்சோ'வில் சிறைக்கு சென்ற நபர், மீண்டும் அதே சிறுமிக்கு 'லவ் டார்ச்சர்' கொடுத்து, அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவர், நேற்று முன்தினம் மாலை, சூளைமேடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பினார்.
இது குறித்து சிறுமியின் தாய் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, சூளைமேடு, கண்ணகி தெருவைச் சேர்ந்த கூரியர் ஊழியர் சுந்தர்ராஜன், 53, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், சுந்தர்ராஜனுக்கு திருமணமாகி, குடும்பத்தினர் பெங்களூரில் வசிக்கின்றனர்.
சென்னையில், கடந்தாண்டு சுந்தர்ராஜன் தங்கியிருந்த உறவினர் வீட்டில், சிறுமியின் குடும்பத்தினர் வசித்துள்ளனர். அப்போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
புகாரின்படி, கடந்தாண்டு ஜனவரியில் சுந்தர்ராஜன் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்தவர், மீண்டும் அதே சிறுமியை பின் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
விசாரித்த அண்ணா நகர் மகளிர் போலீசார், மீண்டும் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, அவரை சிறையில் அடைத்தனர்.
சிறுமிக்கு இரண்டாவதுமுறையாக பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை, ஓராண்டு சிறையில் அடைக்கும்வகையில் சட்டம் இருப்பதாக, போலீசில் தரப்பில் கூறப்படுகிறது.