/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குட்கா விற்ற வழக்கில் 55 பேர் சிக்கினர்
/
குட்கா விற்ற வழக்கில் 55 பேர் சிக்கினர்
ADDED : பிப் 13, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில், வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 55 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 220 கிலோ குட்கா, 3.1 கிலோ மாவா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.