sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'சென்னை உலா - 2.0' திட்டத்தில் 6 'ஏசி' எலக்ட்ரிக் பஸ்கள் துவக்கம்

/

 'சென்னை உலா - 2.0' திட்டத்தில் 6 'ஏசி' எலக்ட்ரிக் பஸ்கள் துவக்கம்

 'சென்னை உலா - 2.0' திட்டத்தில் 6 'ஏசி' எலக்ட்ரிக் பஸ்கள் துவக்கம்

 'சென்னை உலா - 2.0' திட்டத்தில் 6 'ஏசி' எலக்ட்ரிக் பஸ்கள் துவக்கம்


ADDED : பிப் 28, 2026 05:31 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 'சென்னை உலா' திட்டத்தின் கீழ், இரண்டாவது கட்டமாக, ஆறு மின்சார 'ஏசி' பஸ்களின் சேவையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் வகையிலான சிறப்பு சுற்றுவட்ட பாரம்பரியப் பேருந்துகளை, கடந்த ஜன., 14ல் துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.

இரண்டாம் கட்டமாக, அமைச்சர் சிவசங்கர், அண்ணா சதுக்கத்தில் நேற்று, ஆறு மின்சார 'ஏசி' பஸ்களின் சேவையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

பேருந்தின் சிறப்புகள்

 சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாசார மற்றும் பொழுது போக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில், 46 கி.மீ., நீளமுள்ள ஒரு வட்டச் சுற்று பாதை வடிமைக்கப்பட்டு உள்ளது. ஒரே டிக்கெட்டில், நாள் முழுதும் பயணிக்கலாம். கட்டணம் 100 ரூபாய்  அனைத்து நாட்களிலும் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, 30 நிமிட இடைவெளியில், அடுத்தடுத்த பேருந்து சேவை இருக்கும்  'ஏசி' பேருந்தில், விருப்பமான நிறுத்தத்தில் ஏறி, பிடித்தமான இடத்தில் இறங்கி ரசிக்கலாம். மீண்டும் அடுத்து வரும், 'சென்னை உலா' பேருந்தில் தங்கள் பயணத்தைத் தொடரலாம்.








      Dinamalar
      Follow us