/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 மயானங்கள் ரூ.7 கோடியில் மேம்பாடு
/
6 மயானங்கள் ரூ.7 கோடியில் மேம்பாடு
ADDED : ஜூலை 29, 2025 12:38 AM
கிண்டி, அடையாறு மண்டலத்தில் உள்ள 6 மயானங்கள், 7 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட உள்ளன.
அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டி, மாஞ்சோலை என்ற பகுதியில், மயான பயன்பாட்டுக்கான காலி இடம் உள்ளது. இதில், எரிவாயு மயானம் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக, 2.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே போல், கிண்டி சிட்கோ வளாகம் மற்றும் அருளாயன்பேட்டையில் உள்ள மயானங்களை மேம்படுத்தி, அழகுபடுத்த, 2.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 170வது வார்டில் சூர்யா நகர், 178வது வார்டில் பாரதி நகர், 180வது வார்டில் திருவள்ளுவர் நகரில் உள்ள மயானங்களை மேம்படுத்த, 1.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆறு இடங்களில் உள்ள மயானங்களிலும், அடுத்த மாதம் மேம்பாட்டு பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.