/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் உதவி மையத்திற்குள் புகுந்த 6 அடி பாம்பு மீட்பு
/
காவல் உதவி மையத்திற்குள் புகுந்த 6 அடி பாம்பு மீட்பு
காவல் உதவி மையத்திற்குள் புகுந்த 6 அடி பாம்பு மீட்பு
காவல் உதவி மையத்திற்குள் புகுந்த 6 அடி பாம்பு மீட்பு
ADDED : ஆக 20, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார், தாம்பரத்தை அடுத்த பெருங்களத்துார் சிக்னல் அருகே, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, போக்குவரத்து காவல் உதவி மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பணியில் இருந்த போலீஸ்காரர்கள், மேஜையின் 'ரேக்' பகுதியில் இருந்த பொருளை எடுக்க முயன்ற போது, உள்ளே பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் உள்ளே பதுங்கியிருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்து, வனத்துறையின் மூலம் வண்டலுார் காப்புக்காட்டில் விட்டனர்.