/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 சாலைகளை தோண்டிவிட்டு 'துாங்கும்' ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்?
/
6 சாலைகளை தோண்டிவிட்டு 'துாங்கும்' ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்?
6 சாலைகளை தோண்டிவிட்டு 'துாங்கும்' ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்?
6 சாலைகளை தோண்டிவிட்டு 'துாங்கும்' ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்?
ADDED : பிப் 17, 2024 12:24 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம், நான்காவது வார்டில், 40க்கும் மேற்பட்ட சாலைகளுக்கு மாற்றாக, புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், காமராஜர் நகர், கன்னிலால் லே அவுட், பெருமாள் கோவில் தெரு, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்த, எஸ்.கே.ஏர்கான்ஸ் ஒப்பந்ததாரர், பழைய சாலைகளை மில்லிங் செய்து, மூன்று மாதங்களாகி விட்டன.
ஆனால், புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், பைக், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை இயக்கும் போது, விழுந்து காயமடைகின்றனர்.
சாலையில் விளையாடும் குழந்தைகள், தவறி விழுந்து முகத்தில் சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. விசேஷ நாட்களில், கோலம் கூட போட முடியவில்லை. பொது குழாய்களில் இருந்து குடங்களில் தண்ணீர் பிடித்து, துாக்கிக் கொண்டு வரமுடியவில்லை என, வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'மில்லிங்' செய்யப்பட்ட சாலைகளுக்கு மாற்றாக, புது தார்ச்சாலை மூன்று நாட்களில் போடப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், ஒப்பந்ததாரர் சாலை போடவில்லை. இதுகுறித்து, சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, போனை எடுக்கவில்லை. எனவே, நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு, நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
-மாநகராட்சி அதிகாரி.