/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது
/
கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது
ADDED : ஜன 11, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, பேசின்பாலம் சாலையில், பேசின்பாலம் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது சந்தேகத்தின்படி, 'கோழி' வெங்கடேசன், 52, என்பவரை பிடித்து விசாரித்த போது, அவரிடம், 12 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த 'அருப்பு' கஸ்துாரி,59, அன்பழகி, 28, நவீன்குமார், 25, சரண், 18, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரின் மீதும், வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.