ADDED : ஏப் 13, 2026 04:40 AM
அ நிறம் | அளவு
பெரம்பூர்: தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
அந்தவகையில், ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மங்களபுரத்தில், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த விமல் குமார், 30.
வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார், 27, திரு.வி.க., நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட விஜய், 23 ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணேசன், 22, 'லோடாங்கு' சீனிவாசன், 25 மற்றும் சஞ்சய், 25 என, மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
