/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டியின் வீடு புகுந்து 6 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு
/
மூதாட்டியின் வீடு புகுந்து 6 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு
மூதாட்டியின் வீடு புகுந்து 6 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு
மூதாட்டியின் வீடு புகுந்து 6 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு
ADDED : ஜூன் 30, 2025 03:21 AM
அண்ணா நகர்:மூதாட்டியின் வீடு புகுந்து 6 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணா நகர், கிழக்கு, வ.உ.சி., காலனி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 77. இவர், தெருக்களில் துடைப்பம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் இறந்த நிலையில், மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.
வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்த லட்சுமி, தரைத்தளத்தை வடமாநில தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியுள்ளார். சாப்பிட்டுவிட்டு, காற்று வசதிக்காக கதவை திறந்து வைத்து துாங்கியதாக தெரிகிறது. அப்போது, சத்தம் கேட்டு எழுந்துள்ளார்.
சுதாரித்தவர் நகைளை சோதித்தபோது, 6 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. மூதாட்டி அளித்த புகாரின்படி, அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.