ADDED : அக் 16, 2024 12:18 AM
மழைநீர் சூழ்ந்துள்ளதால் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்
* பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை
* மேட்லி சுரங்கப்பாதை
* கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை
* ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
* வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
* சூரப்பட்டு அண்டர் பாஸ்
போக்குவரத்து மாற்றம்
* மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், கண்ணம்மாபேட்டை - முத்துரங்கன் சாலை - 17 அடி சாலை - அரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன
* பெரம்பூர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் - முரசொலி மாறன் பாலம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன
* சுதந்திர தின பூங்கா முதல் சங்கீதா ஓட்டல் வரையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் இருந்து சங்கீதா ஓட்டல் நோக்கி வரும் வாகனங்கள், டேங் பண்ட் சாலை சந்திப்பு வழியாக லயோலா கல்லுாரிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்
* இதுதவிர, மழைநீர் அதிகம் தேங்கியதால், புரசைவாக்கம் தானா தெரு, ஈ.வெ.ரா.,சாலை, குருசாமி மேம்பாலம், பி.எஸ்.சிவசாமி சாலை, சேமியர்ஸ் சாலை, ஸ்டெர்லிங் சாலை, பிரகாசம் சாலை, சிந்தாமணி, பட்டூல்லாஸ் சாலை, மாதவரம் ரவுண்டான உள்ளிட்ட, 58 சாலைகளில், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.