நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவந்தாங்கல்:நங்கநல்லுார், லட்சுமிநகரை சேர்ந்தவர் ராமநாதன், 64. இவர், கடந்த மாதம் 22ம் தேதி, குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, 25ம் தேதி வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர். இதில், பல்லாவரத்தை சேர்ந்த கமலக்கண்ணன், 65, சரவணன், 30, வெங்கடேசன், 35, கணபதி, 45, என தெரிந்தது.
இதில், கமலக்கண்ணன் மீது 33 திருட்டு வழக்குகள் உள்ளன. நேற்று, நான்கு பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து, 64 சவரன் நகை பறிமுதல் செய்தனர்.