ADDED : மே 01, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., மெட்ராஸ் இணைந்து, மாவட்ட அளவிலான 39வது கேரம் சாம்பியன்ஷிப் போட்டி ராயபுரத்தில் நடக்கிறது.
இதில், கேடட்ஸ், சப் - ஜூனியர், ஜூனியர், யூத், தனிநபர், இரட்டையர், ஓபன், வெட்ரன்ஸ் உள்ளிட்ட இருபாலருக்கும், மொத்தம் 14 வகையாக போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மொத்தம் 643 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். 'நாக் அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டிகள், நாளை வரை நடக்கிறது.