ADDED : மார் 16, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, இணை கமிஷனர் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ரயில்வே தண்டவாளத்தை கடந்து வந்த வாலிபர், போலீசை பார்த்ததும் கையில் வைத்திருந்த பார்சலை, தண்டவாளத்தில் போட்டு தப்பியோடினார். போலீசார் அவரை விரட்டி பிடித்தனர்.
இதில், திருவொற்றியூர், ராஜாஜி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன், 22, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.