ADDED : மார் 02, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, டி.பி.கே., தெருவில், வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு, திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.
அப்போது, வீடு ஒன்றில் இருந்து, 50 கிலோ ஜர்தா, 4.5 கிலோ மாவா பாக்கெட்டுகளை கைப்பற்றினர். சனாவுல்லா, 40, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், நேற்று காலை, மண்ணடி, மூட்டைக்காரன் தெரு சந்திப்பில், கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 13 கிலோ ஜர்தா கைப்பற்றப்பட்டது.
இதில், தொடர்புடைய, இப்ராஹிம் 1வது தெருவைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுனரான அன்சர் பாஷா, 43, கிஷோர்குமார், 19, ஆகியோரை கைது செய்தனர்.
அதன்படி, 67.5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.

