/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6ம் தேதி மாரத்தான் ஓட்டம் அதிகாலையில் மெட்ரோ சேவை
/
6ம் தேதி மாரத்தான் ஓட்டம் அதிகாலையில் மெட்ரோ சேவை
ADDED : ஜன 05, 2024 12:51 AM
சென்னை,சென்னை மாரத்தான் ஓட்டம், நேப்பியர் பாலம் அருகே வரும் 6ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் நடக்கிறது. இதையடுத்து, மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் 6ம் தேதி அதிகாலை 3:00 மணி முதல் முதல் 5:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறப்பு கியூ.ஆர்., குறியீடு பதியப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி, மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம்.
அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம். வழக்கமான மெட்ரோ ரயில் சேவைகள், காலை 5:00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.