/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு கருக்கலைப்பு டாக்டருடன் 7 பேர் கைது
/
சிறுமிக்கு கருக்கலைப்பு டாக்டருடன் 7 பேர் கைது
ADDED : மார் 31, 2025 03:48 AM
புளியந்தோப்பு:புளியந்தோப்பு காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், 14 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் தனிமையில் இருந்ததில், சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதையறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமியை வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கருக்கலைப்பு செய்துஉள்ளனர்.
இதுகுறித்து சிறுமி கொடுத்த தகவலின்படி, சிறுமியின் தாய் செம்பியம் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி போலீசார் வழக்கு பதிந்து சிறுவன், அவனது தந்தை, தாய், அண்ணன், சிறுமிக்கு கருகலைப்பு செய்த மருத்துவர் உட்பட ஏழு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.