/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உத்திரமேரூர் வாலிபரை கொலை செய்த 7 பேர் கைது
/
உத்திரமேரூர் வாலிபரை கொலை செய்த 7 பேர் கைது
ADDED : ஜன 18, 2025 12:38 AM

மறைமலை நகர், காஞ்சிபுரம், உத்திரமேரூரை சேர்ந்த சரவணன், 20, என்பவர், கஞ்சா விற்பனை செய்த பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில், கடந்த 15ம் தேதி மாலை, நண்பரான பிரவீன், 26, மற்றும் அவரது கூட்டாளிகளால் அடித்து கொலை செய்யப்பட்டார். உடலை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் வீசி சென்றனர்.
இது குறித்து விசாரித்த மறைமலை நகர் போலீசார், கொலையாளிகளான சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரவீன், 26, ஆகாஷ், 18, கோகுலகண்ணன், 18, நாகராஜ், 18, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பரதன், 18, மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்களை, நேற்று கைது செய்தனர். பிரவீன் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.