/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்து மாங்காடு அருகே 7 பேர் காயம்
/
வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்து மாங்காடு அருகே 7 பேர் காயம்
வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்து மாங்காடு அருகே 7 பேர் காயம்
வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்து மாங்காடு அருகே 7 பேர் காயம்
ADDED : அக் 13, 2024 02:19 AM
குன்றத்துார்:சென்னை, மாங்காடு அருகே சக்திநகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான்,35, என்பவர், தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று ரிஸ்வான் சமையல் செய்த போது சமையல் காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. தீயை அணைக்க முடியாததால் வீட்டில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று தீயை அணைக்க முயன்றனர்.
அப்போது கேஸ் கசிவு அதிகமாகி, அறை முழுவதும் தீ பிழம்பு பரவியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தீ காயமடைந்தனர். இவர்கள், பூந்தமல்லி மற்றும் மாங்காடில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
பலத்த தீ காயமடைந்த, பக்கத்து வீட்டு சரஸ்வதி, 65 என்பவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த இடம் பூந்தமல்லி மற்றும் மாங்காடு ஆகிய இரு காவல் நிலைய எல்லையில் அமைந்துள்ளதால், இந்த வழக்கு யாருக்கு வரும் என குழப்பம் ஏற்பட்டது. பின் மாங்காடு போலீசார் இந்த வழக்கை ஏற்று, பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.