/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகள் 70 பேருக்கு இணைப்புச்சக்கர ஸ்கூட்டர்
/
மாற்றுத்திறனாளிகள் 70 பேருக்கு இணைப்புச்சக்கர ஸ்கூட்டர்
மாற்றுத்திறனாளிகள் 70 பேருக்கு இணைப்புச்சக்கர ஸ்கூட்டர்
மாற்றுத்திறனாளிகள் 70 பேருக்கு இணைப்புச்சக்கர ஸ்கூட்டர்
ADDED : ஏப் 13, 2025 09:27 PM
சென்னை:தென்சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 70 மாற்றுத்திறனாளிகளுக்கு, 71.26 லட்சம் ரூபாய் மதிப்பிலான இணைப்புச்சக்கர ஸ்கூட்டர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை, சோழிங்கநல்லுாரில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 70 மாற்றுத்திறனாளிகளுக்கு, 71.26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை, தென்சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.
அவர் பேசியதாவது:
தமிழக அரசு சார்பில், விண்ணப்பித்ததில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. மேலும், தென்சென்னை எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று 70 பேருக்கு ஸ்கூட்டர், ஐந்து பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 80,995 ரூபாய் மதிப்பிலான ஆன்ட்ராய்ட் போன்களை வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில், இந்தாண்டில், அறிவுசார் குறைபாடுடைய 6,333 பேர்; தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 117 பேர்; முதுகு, தண்டுவடம் பாதிக்கப்பட்ட 60 பேர்; தொழுநோயால் பாதிக்பபட்டு குணமடைந்த 220 பேர் என 6,656 பேருக்கு, 15.67 கோடி ரூபாயய் பராமரிப்பு உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 23 பேருக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 3.78 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகம் சார்பில், மூன்று பேருக்கு, 1.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையாக, 1,206 பேருக்கு, 6.10 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், அரசு அலுலர்கள் பங்கேற்றனர்.

