/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
70 சதவீதம் பேருக்கு வயிறு சார்ந்த பாதிப்பு
/
70 சதவீதம் பேருக்கு வயிறு சார்ந்த பாதிப்பு
ADDED : டிச 18, 2025 05:22 AM

சென்னை: சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனையில், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சை பிரிவை, அம்மருத்துவ குழும செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ், நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல், முறையற்ற உணவு நேரங்கள், நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவற்றால், இந்திய மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் வயிறு உப்புசம், மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும் குறைந்த நபர்களே, மருத்துவ உதவியை நாடுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வடபழனி காவேரி மருத்துவமனையில் செரிமான மண்டல அறிவியல் மையம், அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனையின் இரைப்பை குடலியல் இடையீட்டு சிகிச்சை நிபுணர் பாண்டுரங்கன் பாசுமணி கூறியதாவது:
கோடை காலம், குளிர் காலம் போன்ற பருவத்திற்கு ஏற்ப ஜீரண பாதிப்பு அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி இரவில் துாங்காமல் இருப்பது, நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல், உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாதது, காரமான மசாலா பொருட்கள் சாப்பிடுவதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதற்கு உரிய சிகிச்சை பெறாவிட்டால், கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்பு வரை ஏற்படக்கூடும். இதற்கு ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க தான் சிறப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

