/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாம்சங் தொழிலாளர்கள் 70 பேர் கைது
/
சாம்சங் தொழிலாளர்கள் 70 பேர் கைது
ADDED : நவ 18, 2025 04:39 AM

ஸ்ரீபெரு: ம்புதுார்: காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள, 'சாம்சங்' தொழிற்சாலையில், தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், 2024 செப்., 9, முதல் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். பின், அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு பணிக்கு திரும்பினர்.
தொழிற்சாலைக்குள் கூட்டத்தை கூட்டி, பதற்றமான சூழலை உருவாக்கியதாக கூறி, பிப்., 4ல், 27 பேர், 'சஸ்பெண் ட்' செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பணி வழங்கக்கோரி, நேற்று காலை, சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில், தொழிலாளர்கள் ஒன்று கூடினர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் செல்ல முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 70 பேரை கைது செய்தனர். அவர்களை, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

