/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குறைதீர் முகாமில் 724 போலீசார் மனு
/
குறைதீர் முகாமில் 724 போலீசார் மனு
ADDED : ஜன 22, 2025 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகர போலீசில் பணிபுரியும் போலீசாருக்கு, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று குறைதீர் முகாம் நடந்தது.
இதில், சட்டம் -- ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும், 21 இன்ஸ்பெக்டர்கள், 56 எஸ்.ஐ.,க்கள், 647 போலீசார், கமிஷனர் அருணிடம் மனுக்கள் அளித்தனர்.
அதில், பணி மாறுதல், தண்டனை களைதல், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.