/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கத்தில் ரயில் - பேருந்து நிலையம் இணைக்க ரூ.74.5 கோடியில் நடை மேம்பாலம்

ADDED : மார் 13, 2024 12:49 AM

கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இணைக்கும் வகையில், 74.5 கோடி ரூபாயில் புதிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
ஜி.எஸ்.டி., சாலையின் குறுக்கே, 140 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்தில் அமைய உள்ள இப்பாலத்தில், பயணியர் வசதிக்காக நகரும் படிகட்டுகள் மற்றும் மின்துாக்கிகள் அமைய உள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகள் நேற்று துவங்கின. 12 மாதங்களுக்குள் முடித்து, பயணியர் வசதிக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் நிறைவு பெற்றவுடன், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, பேருந்து நிலையத்திற்கு பயணியர் எளிதாக வந்து செல்ல முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரில், பொழுதுபோக்கு அம்சத்துடன்கூடிய நீருற்று பூங்கா நேற்று திறக்கப்பட்டது.
மொத்தம் 12.8 கோடி ரூபாய் செலவில், ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் நடைபாதை, அலங்கார பூச்செடிகள், அமரும் பலகைகள், குழந்தைகளுக்கான நீரூற்று, சதுரங்க சிற்பங்கள், குளம், கால்வாய்கள், வண்ணமயமான விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.