/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் பிரச்னை தீர்க்க ரூ.78 கோடியில் திட்டம்
/
கழிவுநீர் பிரச்னை தீர்க்க ரூ.78 கோடியில் திட்டம்
ADDED : மார் 12, 2024 12:30 AM
செம்மஞ்சேரி சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு செம்மஞ்சேரியில், ஒருங்கிணைந்த கழிவுநீர் திட்டத்திற்கு 78.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், 21 கி.மீ., நீளத்தில் 250 முதல் 400 மி.மீ., விட்டம் உடைய கழிவுநீர் குழாய் மற்றும் 10 கி.மீ., நீளம், 150 முதல் 500 மி.மீ., விட்டம் உடைய விசைக்குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.
மேலும், 827 எண்ணிக்கையில், இயந்திர நுழைவாயில்கள், 2 கழிவுநீர் இறைக்கும் நிலையங்கள், 5 கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், தினமும் 50 லட்சம் லிட்டர் கழிவுநீர், சோழிங்கநல்லுார் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லும் வகையில் கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள், நேற்று துவங்கின. இத்திட்டம் வாயிலாக, 52,000 பேர் பயன் அடைவர் என அதிகாரிகள் கூறினர்.

