/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
8 விமானங்கள் திடீர் ரத்து பயணியர் கடும் அவதி
/
8 விமானங்கள் திடீர் ரத்து பயணியர் கடும் அவதி
ADDED : செப் 16, 2025 12:51 AM
சென்னை;முன்னறிவிப்பின்றி எட்டு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில், பயணியர் கடும் அவதிக்குள்ளாயினர்.
மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 4:25 மணிக்கு வர வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.
மேலும், தெலுங்கான மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து காலை 9:40 மணி; துாத்துக்குடியில் இருந்து, பகல் 1:45 மணிக்கு வர வேண்டிய விமானம் உட்பட, நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், சென்னையில் இருந்து நள்ளிரவு 12:10 மணிக்கு, புனே நகருக்கு புறப்பட வேண்டிய தனியார் விமானம் உட்பட, நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால், நேற்று ஒரே நாளில் மட்டும் வருகை, புறப்பாடு என, எட்டு விமானங்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டதால், பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
நிர்வாக காரணங்களால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.