ADDED : ஆக 24, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
பூந்தமல்லி, ஆக.,25-
பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகமாக சுற்றித்திரிந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்,23, அன்புமணி,25, ஆகியோரை பிடித்து சோதனை செய்தபோது, இவர்கள் வைத்திருந்த பையில் எட்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
