தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கொலை திட்டத்துடன் வலம்; சிறுவன் உட்பட 8 பேர் கைது

 கொலை திட்டத்துடன் வலம்; சிறுவன் உட்பட 8 பேர் கைது

 கொலை திட்டத்துடன் வலம்; சிறுவன் உட்பட 8 பேர் கைது


ADDED : ஜூலை 08, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 07:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணலி புதுநகர்: மணலி புதுநகர், ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள காலி இடத்தில், வாலிபர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள், மணலி புதுநகர் போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் தெரிவித்தனர்.

போலீசாரை கண்டதும் வாலிபர்கள் தப்ப முயன் றனர். அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில், அதே பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ், 23, ரதீஷ், 24, சந்தோஷ், 21, கிருஷ்ணன் பிரசாத், 22, சசிகுமார், 20, சஞ்சய், 23, விக்னேஷ், 24 மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது.

இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் முன் விரோதம் இருந்துள்ளதும், எதிர் கும்பலைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு அப் பகுதியில் காத்திருந்ததும் தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து எட்டு பட்டாக்கத்தி மற்றும் அரிவாளை பறிமுதல் செய்த போலீசார், வாலிபர்கள் ஏழு பேரை புழல் சிறையிலும், 17 வயது சிறுவனை அரசு சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us