/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீனவரை வெட்டி கொன்ற இளைஞர்கள் 8 பேர் கைது
/
மீனவரை வெட்டி கொன்ற இளைஞர்கள் 8 பேர் கைது
ADDED : ஜன 17, 2025 12:21 AM

புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் வினோத், 32; மீனவர். இவரது மனைவி கவுசல்யா. தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. மனைவி, குழந்தை பெங்களூருவில் வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே நின்ற வினோத்தை, மூன்று பேர் கும்பல் கம்பி மற்றும் கிரிக்கெட் மட்டையால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் தப்பியது. இதில், பலத்த காயமடைந்த வினோத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த ரித்திக்ரோஷன், 19, கோகுல், 20, யுவராஜ், 19, சுனில், 19, முத்து, 19, அபினேஷ், 19, லோகேஷ்ராஜ், 19, நரேஷ்குமார், 20, ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.
விசாரணையில், கொலையான வினோத்திடம் 'கஞ்சா அடிப்பதாக என்னை பற்றி ஏன் போலீசிடம் போட்டுக் கொடுக்கிறாய்' எனக்கேட்டு, நரேஷ்குமார் பிரச்னை செய்து வந்துள்ளார். அப்போதில் இருந்து இருவருக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன், நாகூரான் தோட்டம் பூங்காவில், நரேஷ்குமார் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வினோத், 'இங்கெல்லாம் மது அருந்தக் கூடாது; வரக்கூடாது' என்று மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நரேஷ்குமார், வினோத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி, சபரிமலைக்கு சென்று வரும்போது, இரண்டு கத்தி வாங்கி வந்துள்ளார். பின், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.