/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகன நிறுத்தம் அமைக்காத 80 உணவகங்களுக்கு ‛'சீல்'
/
வாகன நிறுத்தம் அமைக்காத 80 உணவகங்களுக்கு ‛'சீல்'
ADDED : பிப் 07, 2024 12:56 AM

சென்னை, வணிகம் சார்ந்த நிறுவனங்கள், வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். ஆனால், பல உணவகங்களில் 'பார்க்கிங்' ஏற்படுத்தாததால், அங்கு செல்வோர், சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் நெரிசல் அதிகரிக்கிறது.
இதனால், வாகன நிறுத்தம் அமைக்காமல் செயல்படும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகள், மாநகராட்சிக்கு கடிதம் எழுதினர்.
இதன் அடிப்படையில், வாகன நிறுத்தம் இல்லாமல் செயல்படும், உணவகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் மீது, மாநகராட்சி வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.
முதற்கட்டமாக, அதிக நெரிசல் ஏற்படும் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், கிண்டி, அடையாறு உள்ளிட்ட இடங்களில், 80 உணவகங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறியதாவது:
போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்த வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கிறோம். முறையாக வாகன நிறுத்தம் அமைத்து, போலீசாரிடம் தடையின்மை சான்று வாங்கி வந்தால், 'சீல்' அகற்றப்படும்.
இதர வணிக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதனால், முக்கிய இடங்களில் ஏற்படும் வாகன நெரிசல் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

