ADDED : பிப் 14, 2024 12:45 AM
சென்னை, ஆதம்பாக்கம், திருவெண்காடு சுப்ரமணிய கனபாடிகள் வேதபாராயண அறக்கட்டளை சார்பாக 86ம் ஆண்டு, சதுர் வேத பாராயணம், மகா ருத்ர யாகம் நடக்கிறது. நிகழ்ச்சிகள் வரும் 21 முதல் மார்ச் 3 வரை, கும்பகோணம் சங்கர மடம் மற்றும் உத்ராதி மடத்தில் நடைபெற உள்ளது.
பிப்., 24ல் மதியம், உப்பிலியப்பன் கோவிலிலும், கிருஷ்ணபிரேம சுவாமிகளின் பரனுாரிலும், முரளிதர சுவாமிகள் தலைமையில் வேதபாராயணம் மாலை 6:30 முதல் 8:00 வரை நடைபெறும். யஜுர் வேதம் சாகையில் கல் வைத்த வாரம் என்கிற வேத பரிஷை, பிப்., 29லும் நடைபெறும்.
சுதர்சன ஹோமம், மார்ச் 1ல், சக்ரபாணி கோவிலில் நடக்கிறது. ராதா கல்யாணம், மார்ச் 2, 3 தேதிகளில், திருவிசைநல்லுார் ஸ்ரீராமகிருஷ்ண பாகவதர் வாயிலாக நடைபெறும்.
மகாருத்ர ஹோமம், வஸேர்த்தார ஹோமம், தம்பதி பூஜை, வடகுடி சங்கரராம தீட்சிதர் தலைமையில், மார்ச் 3ல் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிர்வாகி சந்திரன் செய்கிறார்.
