தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 9 விமான சேவைகள் ரத்து

9 விமான சேவைகள் ரத்து

9 விமான சேவைகள் ரத்து


ADDED : அக் 17, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,பயணியர் வருகை குறைவு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, சென்னையில் இருந்து புறப்படும்; சென்னைக்கு வரும், ஒன்பது விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து நேற்று காலை 6:55 மணிக்கு மதுரை; காலை 10:35 மணிக்கு சேலம்; மதியம் 2:40 மணிக்கு சீரடி; மாலை 6:05 மணிக்கு திருச்சி; மாலை 6:55 மணிக்கு ஹைதராபாத் செல்லும் விமானம் என்று, மொத்தம் ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மதுரையில் இருந்து காலை 10:00 மணி; டில்லியில் இருந்து மதியம் 1:50 மணி; ஹைதராபாத்தில் இருந்து மாலை 6:10 மணி; திருச்சியில் இருந்து இரவு 8:40 மணிக்கு சென்னை வர வேண்டியது என, நான்கு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us