/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் ஸ்டேஷனில் 9 லிப்ட் 10 எஸ்கலேட்டர் பயன்பாட்டிற்கு வருகிறது: ரயில்வே அதிகாரி
/
தாம்பரம் ஸ்டேஷனில் 9 லிப்ட் 10 எஸ்கலேட்டர் பயன்பாட்டிற்கு வருகிறது: ரயில்வே அதிகாரி
தாம்பரம் ஸ்டேஷனில் 9 லிப்ட் 10 எஸ்கலேட்டர் பயன்பாட்டிற்கு வருகிறது: ரயில்வே அதிகாரி
தாம்பரம் ஸ்டேஷனில் 9 லிப்ட் 10 எஸ்கலேட்டர் பயன்பாட்டிற்கு வருகிறது: ரயில்வே அதிகாரி
ADDED : அக் 24, 2025 01:50 AM
சென்னை: ''தாம்பரம் ரயில் நிலையத்தில், ஒன்பது மின் துாக்கிகள், 10 நகரும் படிக்கட்டுகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது,'' என, சென்னை ரயில்வே கோட்டம் கூடுதல் மேலாளர் அன்கூர் சவுகான் கூறினார்.
தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டம் சார்பில், பரங்கிமலை, தாம்பரம் ரயில் நிலையங்களில், 'அம்ரித் சம்வாத்' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ரயில் நிலையங்களில் அதிகாரிகள் பயணியருடன் கலந்துரையாடல் நடத்தி, துாய்மை மற்றும் பிற அம்சங்களை மேம்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
தாம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை கோட்டத்தின் கூடுதல் ரயில்வே மேலாளர் அன்கூர் சவுகான் பங்கேற்று, பயணியருடன் உரையாடி, அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், அவர் பேசியதாவது:
பயணியரின் தேவையை கேட்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம். தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒன்பது மின் துாக்கிகள், 10 எஸ்கலேட்டர்கள் எனும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், நடைமேம்பாலமும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை விரைவில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மேலும், பயணியர் நெரிசல் இன்றி செல்ல வசதியாக நடைமேடை 7, 8ல் விரிவாக்கம் பணிகள் நடந்து வருகின்றன.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது புதிய ரயில் பாதை 757.18 கோடி ரூபாயில் அமைக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பாதை அமைப்பதன் வாயிலாக, கூடுதலாக ரயில்கள் இயக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

