/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லிப்டில் 1 மணி நேரம் தவித்த 9 பேர் மீட்பு
/
லிப்டில் 1 மணி நேரம் தவித்த 9 பேர் மீட்பு
ADDED : அக் 16, 2024 12:06 AM
பேசின்பாலம், மீன் வியாபாரம் செய்வதற்காக, திருத்தணியிலிருந்து சென்னைக்கு மின்சார ரயிலில் வந்த பயணிகள் சிலர், நேற்று முன்தினம் இரவு, 11:45 மணியளவில், பேசின்பாலம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினர்.
அங்கிருந்து காசிமேடு செல்ல வேண்டும். இதற்காக, மற்றொரு நடைமேடை செல்ல, 'லிப்ட்'டில் ஏறிச் சென்றனர். திடீரென, 'லிப்ட்' பாதியிலேயே பழுதாகி நின்று விட்டது.
உடனே, லிப்டில் சிக்கிய பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி நுார் முகமது, 40, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பேசின்பாலம் போலீசார், லிப்ட் மெக்கானிக் கணபதி என்பவருக்கு தகவல் தெரிவித்து, நள்ளிரவு, 12:45 மணிக்கு, லிப்டில் சிக்கிய அஸ்வினி, பெருமாள், கன்னியம்மாள் உள்ளிட்ட ஒன்பது பேரையும் பத்திரமாக மீட்டனர்.