ADDED : பிப் 25, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பியம், மணலி, சின்னமாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா, 57. உறவினர் திருமணத்திற்கு சென்ற இவர், ரயிலில் வந்து பெரம்பூர் நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து வீட்டிற்குச் செல்ல ஆட்டோவில் ஏறிய போது, அவர் வைத்திருந்த நகை பை காணாமல் போனது தெரிந்தது.
அதில், 6 மற்றும் 3 சவரனில் இரண்டு செயினும், 2,000 ரூபாயும் இருந்துள்ளது.
இதுகுறித்து, செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக போலீசார் விசாரிக்கின்றனர்.