/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தமிழக வீரர்கள் 9 பேர் பங்கேற்பு
/
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தமிழக வீரர்கள் 9 பேர் பங்கேற்பு
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தமிழக வீரர்கள் 9 பேர் பங்கேற்பு
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தமிழக வீரர்கள் 9 பேர் பங்கேற்பு
ADDED : ஏப் 27, 2025 01:34 AM
சென்னை:தென்கொரியாவின் குமி நகரில் நடக்கவுள்ள 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு வீரர்கள், மூன்று வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு தடகளம் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், ஆசிய அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், இம்முறை, தென்கொரியாவின் குமி நகரில், மே 27 முதல் 31ம் தேதி வரை நடக்கவுள்ளன.
இதில் இந்திய அளவில், இருபாலரிலும் 64 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் தமிழகத்சை் சேர்ந்த ஒன்பது வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன், கொச்சியில் நடந்த 28வது தேசிய தடகள போட்டியின் வாயிலாக, 64 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.