/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாலில் ' தொழில் ' வாலிபர் கைது 9 பெண்கள் மீட்பு
/
மாலில் ' தொழில் ' வாலிபர் கைது 9 பெண்கள் மீட்பு
ADDED : பிப் 18, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், அடுக்குமாடி குடியிருப்பில், வணிக வளாகம் செயல்படுகிறது.
இங்குள்ள 'ஸ்பா' மற்றும் சலுான் கடையில், பாலியல் தொழில் நடப்பதாக, கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தை தனிப்படை போலீசார் ஆய்வு செய்த போது, பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.
தொழிலில் ஈடுபட்ட அயனாவரத்தைச் சேர்ந்த விஜயகுமார், 34, என்பவரை கைது செய்து, உரிமையாளரை தேடி வருகின்றனர். தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஒன்பது பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.