/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க 900 மீட்டருக்கு வேலி
/
கடற்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க 900 மீட்டருக்கு வேலி
கடற்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க 900 மீட்டருக்கு வேலி
கடற்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க 900 மீட்டருக்கு வேலி
ADDED : செப் 08, 2025 06:20 AM
திருவொற்றியூர்: கடற்கரைகளில் குப்பை கொட்டுவதை தடுக்கும் பொருட்டு, 900 மீட்டர் துாரத்திற்கு வேலி அமைக்கப்படுகிறது.
திருவொற்றியூரில், என்.டி.ஓ., குப்பம், திருச்சினாங்குப்பம், ஒண்டிக்குப்பம், பாப்புலர் எடை மேடை, திருவொற்றியூர் குப்பம், கே.வி.கே.குப்பம், எண்ணுாரில், ராமகிருஷ்ணா நகர், பாரதியார் நகர், சின்னகுப்பம், தாழங்குப்பம் உள்ளிட்டவை கடற்கரை பகுதிகள்.
இதில், திருச்சினாங்குப்பம், என்.டி.ஓ., குப்பம் போன்ற ஆள்நடமாட்டம் குறைவான இருக்கும் கடற்கரைகளில், கட்டட கழிவுகள், பிளாஸ்டிக், அபாயகரமான குப்பையை, சமூக விரோதிகள் சிலர் கொட்டி செல்வது வாடிக்கையாக இருந்தது.
இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நம் நாளிதழிலும் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தின் மூலதன நிதியான, 14 லட்ச ரூபாய் செலவில், குப்பை கொட்டுவதாக அறியப்படும் இடங்களில், இரும்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதன்படி, முதற்கட்டமாக, என்.டி.ஓ., குப்பத்தில் இருந்து, ஒண்டிகுப்பம் வரையிலான, 900 மீட்டர் துாரத்திற்கு, வேலி அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் படிப்படியாக தொடரும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.