/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாஞ்சா நுால் அறுத்து 2 வயது குழந்தை படுகாயம்
/
மாஞ்சா நுால் அறுத்து 2 வயது குழந்தை படுகாயம்
UPDATED : நவ 18, 2024 02:57 AM
ADDED : நவ 17, 2024 11:05 PM
வியாசர்பாடி:வியாசர்பாடியில், தந்தையுடன் 'பைக்'கில் சென்ற இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நுால் அறுத்து, படுகாயம் ஏற்பட்டது.
கொடுங்கையூர், முத்தமிழ் நகர், எட்டாவது பிளாக்கை சேர்ந்தவர் பாலமுருகன், 33; மெக்கானிக்.
இவரது மனைவி கவுசல்யா, 30. தம்பதிக்கு இரண்டரை வயதில் புகழ்வேலன் என்ற மகன் உள்ளார்.
நேற்று மாலை 4:15 மணியளவில், பாலமுருகன் 'பைக்'கின் முன்புறம் மகன் புகழ்வேலனை அமர வைத்து, மனைவி கவுசல்யாவுடன் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றார்.
அப்போது, எங்கிருந்தோ வந்த மாஞ்சா நுால், குழந்தையின் கழுத்தை அறுத்தது. இதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு, கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு, குழந்தையின் கழுத்தில் 7 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.