/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரிசார்ட்டில் நடந்த திருமணத்தில் கைவரிசை தங்கும் விடுதி நடத்தும் கொள்ளையன் கைது
/
ரிசார்ட்டில் நடந்த திருமணத்தில் கைவரிசை தங்கும் விடுதி நடத்தும் கொள்ளையன் கைது
ரிசார்ட்டில் நடந்த திருமணத்தில் கைவரிசை தங்கும் விடுதி நடத்தும் கொள்ளையன் கைது
ரிசார்ட்டில் நடந்த திருமணத்தில் கைவரிசை தங்கும் விடுதி நடத்தும் கொள்ளையன் கைது
ADDED : டிச 14, 2024 01:09 AM

சென்னை:சென்னையில் நடந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பேத்தி திருமணத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 30,000 ரூபாய் பணத்தை திருடிய, திருச்சி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 92; ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவரின் மகன் ஆனந்த முரளி, 57. கடந்த 5ம் தேதி, சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில், சண்முகத்தின் மகன்வழி பேத்தியின் திருமணம் நடந்தது. பெண் வீட்டார், 3ம் தேதியே ரிசார்ட்டில் குடும்பத்துடன் தங்கி, திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.
கடந்த, 5ம் தேதி காலை, 8:30 மணியளவில், மணமேடைக்கு செல்லும் முன், மணப்பெண் வைர ஆபரண நகைகளை அணிய, தன்னுடைய அறைக்கு சென்றார். அப்போது, வைர நெக்லெஸ், கம்மல் மற்றும் தங்க நகைகள், 30,000 ரூபாய் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து, தந்தையிடம் தெரிவித்தார். நிலைமையை புரிந்த மணப்பெண் வீட்டார், நல்லபடியாக திருமணம் நடக்கட்டும். அடுத்தகட்ட நடவடிக்கையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தனர்.
மகளுக்கு திருமணம் நடந்து முடிந்ததும், சம்பவம் குறித்து, நீலாங்கரை காவல் நிலையத்தில், ஆனந்தமுரளி புகார் அளித்தார். ரிசார்ட்டில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை, போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மணமகள் தங்கியிருந்த அறைக்கு, இரண்டு பேர் வந்து சென்றது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், அவர்கள் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் சுதர்சன், 31 மற்றும் கார்த்திக், 23 என்பது தெரியவந்தது. ஸ்ரீரங்கம் அருகே, கல்லுக்குடி மலைப்பட்டி கிராமத்தில் பதுங்கி இருந்த சுதர்சனை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கூட்டாளி கார்த்திக் தப்பி விட்டார்.
விசாரணையில், 10 ஆண்டுகளாக ரிசார்ட்ஸ், பண்ணை வீடுகளில் நடக்கும் வி.ஐ.பி., வீட்டு திருமணங்களில் திருடி வந்தது தெரியவந்தது.
எம்.பி.ஏ., பட்டதாரியான சுதர்சன், திருட்டு மற்றும் கொள்ளையில் கிடைத்த பணத்தில், வெட்டுவாங்கேணி பகுதியில் தனியார் தங்கும் விடுதி நடத்தி வருவதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து, 12 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.